எஸ்.ரி.சீலனின் ஊர்க்குருவியின் உலா கவிதை நூல் மற்றும் கவிதைகளடங்கிய இறுவெட்டு வெளியீடு.

தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் மனித வள அபிவிருத்திச் சபையின் உதவிப்பணிப்பாளரும், வெள்ளிச்சரம் இணையத்தளத்தின் ஆசிரியருமான சி.தணிகசீலன் (அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்களின் 'ஊர்க்குருவியின் உலா' எனும் கவிதை நூல் வெளியீடானது 2ம் திகதி டிசம்பர் மாதம் 2017 சனிக்கிழமை அன்று மட்டக்களப்பு மகஜனக் கல்லூரி கலையரங்கில், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தலைவர்சட்டத்தரணி மு.கணேசராசா  தலைமையில் இடம்பெற உள்ளது. 

இந்த நூலின் முதற்பிரதிகள் 25.11.2017 அன்று கௌரவ எதிர்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சட்டத்தரணி கௌரவ இரா. சம்மந்தனிடம் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் அடுத்த பிரதி தமிழ் அரசிக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மாவை சேனாதிராசா  அடுத்த பிரதி ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான  சுமேந்திரன் அவர்களிடமும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நடைபெற இருக்கின்ற நிகழ்வில் பேராசிரியர் மா.செல்வராசா முன்னாள் பீடாதிபதி கிழக்குப் பல்கலைக்கழகம்  மற்றும் இலக்கியவாதி உடுவை ளு. தில்லைநடராசா ஆகியோர் முன்னிலை வகிக்க கலாநிதி க.பிரேமகுமார், சிரேஸ்ட்ட விரிவுரையாளா , முன்னால் உபவேந்தர்;, கிழக்குப் பல்கலைக்கழகம், கலாநிதி க.இராஜேந்திரன், சிரேஸ்ட்ட விரிவுரையாளர், முன்னாள் பீடாதிபதி கிழக்குப் பல்கலைக்கழகம், வைத்திய நிபுணர் க.அருளானந்தம், சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்,எந்திரி.ந.சிவலிங்கம், மாவட்ட உதவி ஆணையாளர், கமநல அபிவிருத்தித் திணைக்களம,; மட்டக்களப்பு,வைத்தியர் கு.சுகுணன்;,  வைத்திய அத்தியட்சகர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை;,கலாநிதி சு.சிவரெட்டினம்;, சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்,, .சுரேஸ் ஜெயப்பிரபா, சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம், சோ.ஜெகநாதன், துறைத்தலைவர் கிழக்குப் பல்கலைக்கழகம்,மற்றும் கவிக்கோ வெல்லவூர்க் கோபால்,சைவப் புரவலர்.வி.ரஞ்சிதமூர்த்தி ஆகியோருடன் புத்திஜீவிகள், கலைஞர்கள், ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.

இந்த கவிதை வெளியீட்டு நிகழ்வில் ஆசியுரையினை சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார், பீடதிபதி, காயத்திரிபீடம் மட்டக்களப்பு  வழங்க இருக்கின்றார்.

இந்த புத்தக வெளியீட்டை சிறப்பிக்கும் முகமாக கலை நிகழ்வுகளும் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பின் முதுபெரும் கலைஞர்களாக விளங்கும் மாஸ்ட்டர் சிவலிங்கம், கவிஞ்ஞர் வாகரைவாணன், கலாபூசணம் கவிஞ்ஞர் தேனூரான் ஆகியோர் கௌரவித்து பாராட்டப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வினை ச.இன்பராசன், உதவிப் பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தொகுத்து வழங்க, இந்த நிகழ்வில் அறிமுக உரையை க.மோகனதாசன் சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப்பல்கலைக்கழகம் அவர்கள் தொடர ஆய்வுரையினை கலாநிதி எஸ்.அமலநாதன், மேலதிகச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அவர்களும் நிகழ்த்த உள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு அன்புக்குரிய ஊடகவியலாளர்கள்,ஆர்வமுள்ளவர்கள், கலைஞர்கள், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொண்டு இந்த முயற்சிக்கு ஊக்கம்தந்து உதவுமாறு அனைவருக்கும் ஆசிரியர் தயவான அழைப்பினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
'ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே
உந்தன் உரிமைகள் கிடைத்திட
தடைகளை உடை தமிழா!