ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்ற பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு

இலங்கையில் பழம்பெரும் அம்மன் ஆலயங்களுல் ஒன்றாகவும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமாகவும் உள்ள மட்டக்களப்பு பெரியபோரதீவு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா இன்று புதன்கிழமை காலை (04-10-2017)ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்ற தீமிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்றது.

கி.மு.03ஆம் நூற்றாண்டு காலத்தில் உருவான ஆலயமாக கருதப்படும் பெரியபோரதீவு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயம் இலங்கையில் உள்ள விஸ்வகர்ம மக்களின் வரலாற்று பொக்கிசமாக போற்றப்படுகின்றது.

அத்துடன் தென்னிந்தியாவில் உள்ள மதுரை மீனாட்சிஅ ம்மன் ஆலயத்தினை ஒத்ததாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.

இத்தனை சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் ஆண்டுக்கொருமுறை நடக்கும் சக்தி விழாவானது கடந்த 23ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

புத்து தினங்கள் நடைபெற்றுவந்த ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கினை விஸ்வப்பிரம்மஸ்ரீ வை.காந்தன்குருக்கள் சிறப்பான முறையில் நடாத்தினார்.

இதில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை அன்னையின் சக்தி மகா யாகம் சிறப்பான முறையில் நடைபெற்று நோற்றுப்புக்கட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் வாவியில் மஞ்சல்குளிக்கும் சடங்கு நடைபெற்றது.

இன்று புதன்கிழமை காலை மூலமூர்த்தியாகிய அன்னைக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தீக்குளி காவல் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

ஆதனைத்தொடர்ந்து பக்தர்கள் புடைசூ பறைமேளம் முழங்க அன்னை சக்தி ரூபமாக எழுந்தருளி ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தீமிதிப்பு நிகழ்வில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் பங்குகொண்டனர்.தீமதிப்பு உற்பத்திசத்தினை தொடர்ந்து தெய்வாதிகள் வாக்குச்சொல்லும் நிகழ்வு நடைபெற்று,ஆயுதபூஜையுடன் சடங்கு நிறைவுபெற்றது.

திருச்சடங்கினையொட்டி களுவாஞ்சிகுடி பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன் விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தன.