வவுணதீவில் வீடுகள் வழங்குவதில் புறக்கணிப்பு –விசாரணை நடாத்துமாறு கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சொறுவாமுனை பகுதியில் பிரதேச செயலக வீடுகள் பங்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த கால யுத்தம் காரணமாக பல பாதிப்புகளை எதிர்கொண்ட இப்பகுதி மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் பிரதேச செயலகம் மற்றும் வீடமைப்பு அதிகாரசபை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஆகியவற்றின் ஊடாக வீடுகள் பகிரப்பட்டுள்ளபோதில் அதில் சில முறையற்றவர்களுக்கும் வவழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த பகுதியின் பிரதேச செயலாளர் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அவர்களுக்கு வீடுகள் பெறுவதற்கான தகுதி இல்லாத நிலையிலும் வீடுகளை வழங்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் அரசியல்வாதிகள்,அதிகாரிகள் தலையிட்டு முறையான விசாரணை நடாத்தப்படவேண்டும் என்பதுடன் உண்மையாக பாதிப்புக்குள்ளான இதுவரை வீடுகள் கிடைக்கப்பெறாத வீடுகள் பெறுவதற்கான தகுதியுடையவர்களுக்கு வீடுகளைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

குறித்த வீடுகள் வழங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் அது தொடர்பான அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் பிரதேச மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.