மனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று முனைப்பு நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.

(சசி துறையூர்) மனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று   முனைப்பு நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.


மனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று முனைப்பு நிறுவனம் செயற்பட்டுவருகின்றதுஉண்மையான சேமிப்பு நாம் பிறருக்கு வழங்குவதே எனமுனைப்பின் கதம்பமாலை நிகழ்வில் ஆசியுரை வழங்கிய இராம சசிதரக்குருக்கள் தெரிவித்தார்.

முனைப்பின் கதம்பமாலை 2017 நிகழ்வு சுவிட்ஸர்லாந்து லுசேன் மாநிலத்தில் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மா.குமாரசாமியின்  வழிநடாத்தலின் கீழ்நிருவாகப்பணிப்பாளர் தா.வேதநாயகம்தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமைநடைபெற்றது.
 ஆசியுரையில் மேலும் தெரிவிக்கையில் விருந்தோம்பலை மட்டக்களப்பு மக்களிடமிருந்தே கற்றுக்கொள்ளவேண்டும்நீங்கள் அனைவரும் ஒருதடவைமட்டக்களப்பு சென்று வாருங்கள் எனஆசான்  தாசீசியஸ் அண்மையில்கூறியவிடயத்தைஞாபகப்படுத்தவிரும்புகின்றேன்.

வுடமாகாணத்தைவிட கிழக்கு மாகாணம் பலவழிகளிலும் பாதிக்கப்பட்ட மாகாணம் நாம்அனைவரும் அங்குள்ள மக்களின்வறுமையினை போக்கு ஏதாவது செய்யவேண்டும்.
இவ்விழாவினை மகிதநேயத்துக்கும்மனிதத்திற்குமான விழாவாகவேபார்க்கின்றேன் என்றார்.
கல்லாறு சதீஸ் தனது சிறப்புரையில்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்பெற்றான்
பொருள்வைப் புழிஎனும் குறளுக்கேற்ப"கொடையே சிறந்த சேமிப்பு "எனும்உண்மையை
 உணர்ந்த சபையானது, "ஈதல்இசைபடவாழ்தல்,அது அல்லது ஊதியம்இல்லை உயிர்க்குஎனும் குறல் வழியே"கொடையே உண்மைப் புகழ்எனும் பொருள்உணர்ந்து
 இணைந்திருந்தமை "அறம் செய விரும்பு"
உழைப்பில் 10வீதத்தினையும் உழைப்பை 10வீதமும் மற்றவர்களுக்காக செலவழிக்க வேண்டும் என்றார்.

நிருவாகப்பணிப்பாளர் தா.வேதநாயகம்தனது தலைமையுரையில்
எதனையும் நாம் இலவசமாக பெறக்கூடாதுஎன்ற மனநிலையினை நாம் மக்கள்மத்தயில் ஏற்படுத்தவேண்டும்.அத்துடன்மக்களின் வறுமைநிலையினைபோக்க மக்களுக்குஉழைப்பைக்காட்டுவோம்,உழைக்ககற்றுக்கொடுப்போம் இதனையே முனைப்புதற்போது செய்து வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் மந்தபோசாக்கு,கல்வியறிவின்மைதற்கொலை,மதுப்பாவனை போன்ற பல்வேறுசவால்களை சந்தித்துள்ளமாவட்டமாகக்காணப்படுகின்றது.
அது மாத்திரமின்றி கல்விநிலையில்ஆரம்பக்கல்வியில் கிழக்கு மாகாணம் 9வதுஇடத்திலும்.பொ..சாதாரணதரத்தில்8வது இடத்திலும் உள்ளது .இதற்கெல்லாம்காரணம் மக்களின் வறுமை நிலையேஇதனைப்போக்க புலம்பெயர்ந்து வாழும் நாம் சிறிய பங்களிப்பாவதுவழங்கவேண்டும்.
இன்று நீங்கள் எங்களைக்காப்பாற்றுங்கள்நாளை நாங்கள் நம்மவர்களைகாப்பாற்றுவோம் என்ற குரல் எமதுமண்ணிலிருந்து நமது காதுகளுக்குவருகின்றன என்றார்.