(லியோன்)
சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் அனைத்து
பாடசாலைகளிலும் நடைபெற்று வருகின்றன .
இதன்கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளிலும் சிறுவர்
தின நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன .
இதற்கு அமைய மட்டக்களப்பு காத்தான்குடி மில்லத் மகளிர் மகா
வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று நடைபெற்றது .
வித்தியாலய அதிபர் திருமதி ஜே. யு .ம் . முசாமில் தலைமையில் நடைபெற்ற
சிறுவர் தின நிகழ்வில் மாணவர்களின் வினோத கலை
நிகழ்வுகள் நடைபெற்றது .
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை
சிறப்பித்தனர்