புள்ளிப்பட்டியலில் மட்டக்களப்பு மாவட்டம் முன்னேற்றம்.

(சசி துறையூர் ) புள்ளிப்பட்டியலில் மட்டக்களப்பு மாவட்டம் முன்னேற்றம்.

இலங்கை தேசிய இளையோர் 29வது விளையாட்டு விழா வின் குழுநிலைப் போட்டிகளில் சிறப்பான பல வெற்றிகளைப் பெற்றுக்கொண்டதன் நிமித்தம் புள்ளிப்பட்டியலில் மட்டக்களப்பு மாவட்டம்  முன்னேற்றம் பெற்றுள்ளது.


இலங்கை தேசிய இளையோர் 29வது விளையாட்டு விழா கடந்த 27.09.2017ம் திகதி புதன் கிழமை முதல் அனுராதபுரம் பொது விளையாட்டு திடலில் கோலகாலமான முறையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது, அந்த வகையில் எதிர்வரும் 30.09.2017 சனிக்கிழமை பரிசளிப்பு நிகழ்வுகளுடன் இந்த வருடத்திற்கான தேசிய இளைஞர் விளையாட்டு விழா நிறைவு பெறவுள்ளது.

அந்த வகையில் இதுவரை நடைபெற்ற ஆடவர் மற்றும் மகளீர்க்கான குழுநிலைப்போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் பல வெற்றிகளை பெற்றுள்ளனர்.

ஆண்களுக்கான உதைப்பந்தாட்டம், ஆண்களுக்கான கபடி,
மகளீர்க்கான கிறிக்கட்,
ஆடவர் கூடைப்பந்தாட்டம் ஆகிய  போட்டிகளில் மட்டக்களப்பு அணி சம்பியண் கிண்ணம் வென்றுள்ளதோடு,

பெண்களுக்கான கபடி போட்டி,
 ஆடவர் கிறிக்கட் ஆகிய போட்டிகளில் மட்டக்களப்பு அணி இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளனர்.

இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்கும் நிலையில் இன்னும் அதிகமான  போட்டிகள் நடைபெறவுள்ளதனால் எமது மாவட்ட வீரர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

தேசிய ரீதியில் எமது மட்டக்களப்பு மாவட்டம் இவ்வாறான வெற்றிகளை பெற்றுக்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகவே இருக்ககூடும்.

இந்த தேசிய விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்க்காக அனுராதபுரத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 90க்கு மேற்பட்ட வீரவீராங்கனைகள், ஏழு இளைஞர் சேவை அதிகாரிகள் உட்பட்ட குழுவினர் கடந்த 26.09.2017 செவ்வாய்க்கிழமை பயணமாயினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.