மட்டக்களப்பு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள அலுவலகம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண விவசாய,கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டாக்டர் பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய,கால்நடை உற்பத்தி,மீன்பிடி,கூட்டுறவுத்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாண விவசாய,கால்நடை உற்பத்தி,மீன்பிடி,கூட்டுறவுத்துறை அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் உட்பட திணைக்கள வைத்தியர்கள்,உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

குpழக்கு மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட இரண்டு கோடி ரூபா செலவில் அனைத்து அலுவலகங்களையும் கொண்டதாக நவீன முறையில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் 70வருட காலத்திற்கு முற்பட்ட வரலாற்றினைக்கொண்ட கட்டிடத்திலேயே இந்த மட்டக்களப்பு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் அலுவலகம் இயங்கிவந்த நிலையில் புதிய கட்டிடத்திற்கு இன்று பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.