29வது இளையோர் விளையாட்டு விழாவில் நடந்த எதிர்பாராத நிகழ்வுகள்.

(சசி துறையூர்)29வது இளையோர் விளையாட்டு விழாவில் நடந்த எதிர்பாராத நிகழ்வுகள்.

இலங்கை  29வது தேசிய இளையோர் விளையாட்டு விழா
 இன்று மாலை 30.09.2017 சனிக்கிழமையுடன் நிறைவுக்கு வருகிறது.

இலங்கை தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த புதன் கிழமை 27.09.2017 ஆரம்பமாகி நான்கு நாட்களாக அனுராதபுரம் வடமத்திய மாகாண விளையாட்டு   மைதானத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி w.j.s.எரந்திக வெலியங்கே அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த விளையாட்டுப் போட்டி ஆரம்ப நிகழ்வில் இளைஞர் விவகார இராஜங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, அவர்கள் கலந்து கொண்டு போட்டி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று வரும் இந்த வருடத்திற்கான இளையோர் விளையாட்டுப் போட்டியை சிறப்பிக்கும் முகமாக பிரமாண்டமான களியாட்ட நிகழ்வுகள், இசைநிகழ்வுகள் என்பன மைதான சூழலில் நடைபெற்றமையும் விசேட அம்சமாகும்.

அந்த வகையில் இன்றை இறுதி நாள் பரிசளிப்பு, மற்றும் நிறைவு விழா வைபவத்தில் விவசாய அமைச்சர் துமிந்த திசநாயக்க, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிசன், சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக அங்கிருந்து இளைஞர் சேவை அலுவலர் ரி.சபியதாஸ் எமது செய்தி பிரிவுக்கு தகவல் தெரிவித்தார்.