இலங்கை தேசிய இளையோர் உதைப்பந்தாட்ட சம்பியன் கிண்ணமும் மட்டக்களப்பு வசமானது.

(சசி துறையூர் )இலங்கை தேசிய இளையோர்
உதைப்பந்தாட்ட சம்பியன் கிண்ணமும் மட்டக்களப்பு  வசமானது.

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு மற்றும் யாழ் மாவட்ட  அணிகள் மோதிக்கொண்டன

இப் போட்டியில் மட்டக்களப்பு அணி மூன்றுக்கு பூச்சியம் என்ற வகையில் யாழ்ப்பாண அணியை வீழ்த்தி கிண்ணம் வென்றது.

அனுராதபுரம் பொது விளையாட்டு திடலில் நடைபெற்று வரும் இலங்கை 29வது இளையோர் தேசிய விளையாட்டு விழாவின் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டீ யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு அணிகளுக்கிடையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் ஆரம்பம் முதல் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு தெரிவான இவ் இரு அணிகளும் இறுதிப் போட்டியிலும்   பலத்த சவாலை ஏற்படுத்தி தமது அபார திறமையை வெளிப்படுத்தியிருந்தன.