மட்டக்களப்பு காலி மாவட்டங்களுக்கிடையிலான ஆடவர் கபடி இறுதிப்போட்டி இன்று.

( சசி துறையூர் ) தற்போது அனுராதபுரத்தில்
 நடைபெற்று வரும் 29 வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில்  மட்டக்களப்பு காலி மாவட்ட  ஆடவர் கபடி சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் (28.09.2017 வியாழக்கிழமை)  அனூராதபுரம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இவ் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் சவால் மிக்க போட்டியாக அமையவுள்ளது.

இம் முறை நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.