வட கிழக்கு இளைஞர்களுக்கிடையில் பெரும் சமர் நிச்சயமாக நிகழும்.

வட கிழக்கு இளைஞர்களுக்கிடையில் பெரும் சமர் நிச்சயமாக நிகழும்.

என்றுமில்லாதவாறு விறுவிறுப்பான பெரும்சமராக இன்று நடைபெறும் போட்டி அமையும்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2017ம்  வருடத்திற்கான 29வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி அனுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

 இன்றைய தினம் இரண்டாம் நாளில் பி.ப 04.00 மணியளவில் இடம்பெறவுள்ள ஆண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு யாழ்ப்பாண மாவட்ட அணிகள் பலபரீட்சை நடாத்தவுள்ளன.

எதிரணிக்கு சவால் விடுக்கும் வகையில் திறமையான பயிற்சி மற்றும் அனுபவ வீரர்களை கொண்ட  மட்டக்களப்பு அணி விளையாடும் என நம்பப்படுகிறது.