“விளாவூர் யுத்தம்” முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் சம்பியன்

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளாவட்டவான் ராஜா விளையாட்டுக்கழகம் தனது 47வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய “விளாவூர் யுத்தம்” என அழைக்கப்படும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் சம்பியனா தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

வசந்தம் ரீவி,வசந்தம் எப்.எம்.இன் பூரண ஊடக அனுசரணையும் விமர்சையான முறையில் இந்த சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது.

“விளாவூர் யுத்தம்”உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது.இந்த சுற்றுப்போட்டியில் 27 அணிகள் கலந்துகொண்டன.

இறுதிப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகமும் முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரண்டு அணிகளும் எந்தவித கோல்களும் பெறப்படாத நிலையில் தண்டனை உதைமூலம் வெற்றி தீர்மானிக்கும் நிலையேற்பட்டது.இதனடிப்படையில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இறுதி நிகழ்வின் இறுதி பரிசளிப்பு நிகழ்வானது ராஜா விளையாட்டுக்கழக தலைவர் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேசசபையின் செயலாளர் திருமதி புத்திசிகாமணி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் ,வசந்தம் தொலைக்காட்சியின் சிரேஸ்ட தயாரிப்பாளர் கோணேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த சுற்றுப்போட்டியில் முதல் இடத்தினை முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகமும் இரண்டாம் இடத்தினை முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகமும் மூன்றாம் இடத்தினை காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக்கழகமும் நான்காம் இடத்தினை முனைக்காடு இராமகிருஸ்ணா பி அணியும் பெற்றுக்கொண்டது.

இந்த சுற்;றுப்போட்டியின் சிறந்த வீரராக முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகத்தினை சேர்ந்த தேவாவும் சிறந்த கோள் காப்பாளராக முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகத்தினை சேர்ந்த உவேஸ{ம் தெரிவுசெய்யப்பட்டனர்.வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக்கேடயங்களும் சம்பியன் கிண்ணங்களும் வழங்கப்பட்டதுடன் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.