சமூக மட்ட விழிப்புணர்வு குழுவினால் தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது

(லியோன்)


மட்டக்களப்பு மாவட்ட தனியார் கல்வி நிலையங்களில் நடைபெறுகின்ற பிரத்தியோக வகுப்புக்கள் ,மாணவர்கள் எதிர்கொள்கின்ற அசௌகரியங்கள் தொடர்பாக  மட்டக்களப்பு மாவட்ட சமூக மட்ட விழிப்புணர்வு குழுவிற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வாளர்களும் செய்யப்பட முறைபாடுகள் தொடர்பில் மாதாந்தம் நடைபெறும் குழு கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது
   இதன் போது நடைபெற்ற  குழு கூட்டத்தின் குறித்த விடயம் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது .

1, காலை 06,00 மணிக்கு முன்னதாகவும் ,மாலை 06.00 மணிக்கு பின்னரும் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் நடத்தப்பட கூடாது .

2, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகின்ற பிரத்தியோக வகுப்புக்கள்  முற்றாக தடைசெய்யப்பட வேண்டும் .

3, தனியார் கல்வி நிலையங்கள் சுகாதாரமான முறையில் அமைக்கப்பட  வேண்டும்

குறித்த விடயங்கள் தொடர்பில் பிரத்தியோக வகுப்புக்கள்  நடாத்தும் கல்வி நிலையங்கள் மற்றும் நபர்கள் கவணத்தில் கொண்டு செயல்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்படுகின்றது .

மட்டக்களப்பு மாவட்ட சமூக மட்ட விழிப்புணர்வு குழுவினால் விடுக்கப்பட்ட அறிவுத்தல்களை மீறி செயல்படுவோருக்கு எதிராக கிடைக்கப்படும் முறைப்பாட்டுக்கு அமைய  பாலியல் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக செயல்பாடுகளாக கருதப்பட்டு  பொலிசார் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் இனைந்து நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்படுகின்றது .


குறித்த விடயம் தொடர்பில் சமுதாய சீர் திருத்த திணைக்களம் ,பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,மனித உரிமை அமைப்புக்கள் , சட்ட வல்லுனர்கள் ஆகியோரின் பங்களிப்புடன்  இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .