(லியோன்)
ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏனைய கிழமை நாட்களில்
அதிகாலை வேளையிலும் இரவு நேரங்களில் வகுப்புக்கள்
நடத்தப்படும் தனியார் கல்வி
நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கமாறு மாவட்ட பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை
விடுக்கப்பட்டுள்ளது .
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைய காலமாக தனியார் கல்வி நிலையங்கள்
அதிகரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது அதிகாலை வேளையிலும் ,
இரவு நேரங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடத்தப்படுகின்ற தனியார் வகுப்புக்கள் மற்றும்
இடம்பெறுகின்ற துஸ்பிரயோகங்கள் தொடர்பாக
பெற்றோர்களினால் மட்டக்களப்பு
மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவின் கவணத்திற்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது .
குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட
விசாரணைகளின் பின் சம்பந்த பட்ட தனியார் கல்வி நிலையங்களுக்கு , சம்பந்த பட்ட
நபர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட
பொலிஸ் மா அதிபருக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்
கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார் .