அமரர் காசிப்பிள்ளை சண்முகம்; ஞாபகார்த்த கிண்ணம் -யங் ஸ்டார் கைப்பற்றியது

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் காசிப்பிள்ளை சண்முகம்; கிண்ண ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு சீலாமுனை யங்கஸ்டார் விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

25அணிகள் பங்குகொண்ட இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக்கழகமும் புன்னைச்சோலை கோப்ரா விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரு அணிகளும் எந்தவித கோல்களும் பெற்றுக்கொள்ளாத நிலையில் மேலதிக உதை (பனால்டி)வழங்கப்பட்ட நிலையில் யங்கஸ்டார் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.

இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் வி.தவராஜா,மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்க தலைவரும் பெருந்தோட்ட மலையக அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளருமான எம்.உதயகுமார், சண்முகம் குறுப்ஒப் கம்பனி உரிமையாளர்கள் உட்ப பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வெற்றிக்கிண்ணங்களும் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டதுடன் சுற்றுப்போட்டி நடைபெறுவதற்கு உறுதுணையளித்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.