மட்டக்களப்பில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு –சுற்றாடலை தூய்மைப்படுத்துமாறு கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துவருவதன் காரணமாக பொதுமக்களை தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்குட்பட்ட அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்குட்பட்ட வெட்டுக்காடு சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபை,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களம்,மட்டக்களப்பு சுகாதார திணைக்களம்,பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் உட்பட பல்வேறு அமைப்புகள்இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தது.

இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜா,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் திணைக்களத்தின் டெங்கு தொடர்பான பிரிவின் டாக்டர் பிரியயதர்சினி,மட்டக்களப்பு சுகாதார திணைக்கள வைத்திய அதிகாரி டாக்டர் ரி.கிரிசுதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.