மட்டக்களப்பில் பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்று திரட்டி சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் முறையில் கலகத்தை உண்டுபண்ணுவதற்க்கு உடந்தையாக இருந்தது யார்.???

                                                                            (சசி துறையூர்)
பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்று திரட்டி சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் முறையில் கலகத்தை உண்டு பண்ணுவதற்க்கு உடந்தையாக இருந்தார்கள் என இருவருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் அழைப்பானை அனுப்பியுள்ளது.


தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் உபதலைவர் பூபால் உட்பட இருவருக்கு இந்த அழைப்பானை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டமும் பதட்ட நிலைமையும் மட்டக்களப்பில் நிலவியது. அது பொதுபலசேனாவின் வருகை தடுத்து நிறுத்தப்பட்டதனை தொடர்ந்து மட்டக்களப்பு மங்களாராம விகாரதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் நகரில் ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவினை மீறி தேரரின் ஆர்ப்பாட்ட நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டமையினை இட்டு பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தி  சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொலிஸார் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாதனை கண்டித்து பொதுமக்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மட்டக்களப்பில் பதட்டமும் அச்ச நிலமையையும் ஏற்பட்டமை யாவரும் அறிந்தது.

இந்த நிலையில் பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்று திரட்டி சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் முறையில் கலகத்தை உண்டு பண்ணுவதற்க்கு உடந்தையாக இருந்தார்கள் என இருவர் மீது மட்டக்களப்பு பொலிஸார் வழக்கு தொடுத்துள்ளனர்.

எதிர்வரும் 14,12,2016 மட்டக்களப்பு நீதவான் நிதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்பப் பட்டுள்ளன.