ரொட்டறிக்கழக ஆளுனர் மட்டக்களப்புக்கு விஜயம் -உதவிகளும் வழங்கிவைப்பு

மட்டக்களப்புக்கு ரொட்டறிக்கழகத்தின் ஆளுனர் சேனக அமரசிங்க விஜயம் மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றினார்.

மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்திற்கு நேற்று மாலை விஜயம் செய்த அங்கு நடைபெற்ற நிகழ்விலும் பங்குபற்றினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரொட்டறிக்கழகத்தின் செயற்பாடுகளை ஆராயும் வகையில் இந்த விஜயத்தினை அவர் மேற்கொண்டிருந்தார்.

இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்புக்கு ரொட்டறிக்கழகத்தின் தலைவர் எஸ்.புஸ்பராஜா தலைமையில் பயனியர் வீதியில் உள்ள ரோட்டறிக்கழகத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்தில்கொண்டு நான்கு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் யுவதி ஒருவருக்கான மருத்துவ செலவுக்கான நிதியும் வழங்கிவைக்கப்பட்டது.

அத்தடன் இந்த நிகழ்வின்போது ரொட்டறிக்கழகத்திற்கு புதிய மூன்று உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சர்வதேச ரொட்டறிக்கழகத்தின் வளர்ச்சிக்காக மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தின் உறுப்பினர்களினால் ஆளுனரிடம் நிதிகளும் வழங்கிவைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.