முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனித நேயப்பணி.

 (சசி துறையூர்)  வடகிழக்கில் யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட மக்கள் அங்கவீனர்களாகவும் உடலிலே வெடி குண்டுகளின்
எச்சங்களை சுமந்தவர்களாகவும் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகி
வாழமுடியாமல் அல்லல் பட்டு வருகின்றனர்.   அவ்வாறு
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வேலைத்திட்டத்தினை முனைப்பு ஸ்ரீ லங்கா
நிறுவனம், முனைப்பு சுவிஸ் அமைப்பின் அனுசரனையுடன் முன்னெடுத்து
வருகின்றது.    

  இந் நடவடிக்கையின் கீழ் 12.12.2016 திங்கட் கிழமை முனைப்பு
ஸ்ரீ லங்கா நிறுவனத்தினுடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை
மேற்கொள்ள வசதியின்றி சிரமத்தை அனுபவித்து வந்த இருவரின்
சிகிச்சைக்கு உதவும் முகமாக  ஒருவருக்கு தலா ஐம்பதனாயிரம், முப்பதனாயிரம் ரூபா என்ற
அடிப்படையில் உதவி வழங்கப்பட்டது.    

 முனைப்பு ஸ்ரீ லங்கா
நிறுவனத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் தலைவர் மா.சசிகுமார் தலைமையில்
இடம்பெற்ற நிகழ்வின் போது முனைப்பு சுவிஸ் அமைப்பின் உறுப்பினர்
து.கிருபாகரன் கலந்துகொண்டு நிதியினை வழங்கி வைத்தார்.
  இந் நிகழ்வில்
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன்,பொருளாளர்
ரி.தயானந்தரவி ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்று பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு புலம் பெயர்ந்த எமது உறவுகள் நேசக்கரம் நீட்டவேண்டும் என்பதுடன் இவ்வாறான மனிதாபிமானம் மிக்க பணியினை முன்னெடுக்கும் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தார்க்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.