மட்டக்களப்பு குமாரத்தன் ஆலயத்தின் திருக்கார்த்திகை வழிபாடு

இந்துக்களின் மிக முக்கியமான தினங்களில் ஒன்றாக திருக்கார்த்திகை தினம் நேற்று திங்கட்கிழமை மாலை ஆரம்பமானது.இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

திருக்கார்த்திகை தினத்தில் வீடுகளிலும் ஆலயங்களிலும் தீபம் ஏற்றி இந்துக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

திருக்கார்த்திகை தினத்தின் குமாராலய தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நேற்று மாலை முருகன் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு இருதயபுரம் குமாரத்தன் ஆலயத்தில் திருக்கார்த்திகை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வரக்குருக்கள் தலைமையில் விசேட யாகம் மற்றும் அபிசேக பூஜைகளுடன் திருக்கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வந்ததுடன் ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து பிராயச்சித்த பூஜைகள் நடைபெற்று விசேட பூஜைகளும் நடைபெற்றன.