மாணவர்களுக்கான ஆளுமை விருத்தியை மேம்படுத்து நாடக பயிற்சி பட்டறை

(லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான ஆளுமை விருத்தியை மேம்படுத்து நாடக பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.


கல்வி அமைச்சின் அழகியல் பிரிவின் ஊடாக அழகியல் கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களின் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் நாடக பயிற்சி பட்டறைகள் பாடசாலை மாணவர்களின்  மத்தியில் நடத்தப்படுகின்றது   .

இதற்கு அமைவாக மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை  மாணவர்களுக்கான நாடக  பயிற்சி பட்டறை மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் மேற்பார்வையில் உதவி கல்விப் பணிப்பாளர் என் .ஜெயஸ்ரீ பவன் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது . .


மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான நாடக பயிற்சி பட்டறையானது பேராசிரியர் எஸ் .மௌனகுரு நெறி படுத்தலின் கீழ் நாடக ஆய்வு அரங்க மாணவர்களின் உதவியுடன்   மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது ..