தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினா பத்திரம் தொடர்பாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது ( வீடியோ )

(லியோன்)

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான  முன் ஆயத்த வினா பத்திரங்கள்  தொடர்பாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் தெரிவித்தார் .


மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் 11.08.2016  மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார் .

2016 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை தயார்படுத்தும் வகையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தினால் வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வழிகாட்டல் பரீட்சைகள் நடத்தப்பட்டு வருகின்றது .

இவ்வாறு நடத்தப்படுகின்ற பரீட்சைகள்  மாணவர்களை சீரழிப்பதாக  அண்மையில் இணையத்தளங்களில் சில தவறான  செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

 உண்மையிலே அவ்வாறான வினா பத்திரம் தயாரிக்கப்படவில்லை, அது பரீட்சையும் இல்லை . அது மாணவர்களுக்காக வழங்கப்படும் வினா கூற்றுத்தொகுதி அது மாணவர்களின் பயிற்சிக்காக வழங்கப்பட்டது .

கடந்த காலங்களிலே மாணவர்களை பயிற்றுவிக்கும் பொழுது மாணவர்கள் சில பகுதிகளிலே தவறுகள் விடப்பட்டத்தினால் அவற்றினை தொகுத்து ஒரு வினா பத்திரமாக மாணவர்களுக்கு கொடுத்து பயிற்றுவிக்கப்பட்டனர் .
அதில் சில சிறிய தவறுகள் இருந்துள்ளது . அதேவேளை இந்த வினா பத்திரங்கள் ஆசிரியர் கைநூல் . கடந்த கால வினா பத்திரங்களுடன் இணைந்ததாகவே வினா பத்திரங்கள் தயாரிக்கப்பட்டிருந்தது .

இது பெரிய வகுப்பு மாணவர்களின் அறிவை கொண்டதாக வினாக்கள் இல்லை .இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றது . 

இவ்வாறு  அந்த வினா பத்திரங்கள் இருக்கின்ற பொழுது மாணவர்களை குழப்புகின்ற விடயங்களும் அதற்காக கூறப்படுகின்ற காரணங்களும் எமக்கு கவலை அளிக்கின்றது .

எனவே இவ்வாறு வெளியிடப்பட்ட செய்தி முற்றிலும் தவறான விடயமாகும் ,  

இவ்வாறு வெளியிடப்பட்ட  செய்தி முற்றிலும் தவறானது என்பதனை மாணவர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும்  தெரிவிக்கும் வகையிலே  இந்த ஊடகவியலாலார்களுடனான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக மட்டக்களப்பு வலையக்கல்வி பணிப்பாளர்  தெரிவித்தார் .


11.08.2016    மாலை மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற  இந்த ஊடகவியலாளர்  சந்திப்பில் வலயக்கல்விப் பணிப்பாளர் . உதவி கல்விப் பணிப்பாளர்கள் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர் .