அமெரிக்க நிறுவனம் நடாத்திய சித்திர போட்டியில் சிசிலியா மாணவி இலங்கைக்கு பெருமை சேர்ப்பு

அமெரிக்காவில் நிலை கொண்டுள்ள Khaled bin Sultan Living Oceans Foundation நிறுவனம் நடாத்திய “ Fishing Under the Radar”  சித்திரப்போட்டியில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் 6ம் தரத்தில் கல்வி பயிலும் செல்வி நகுலேஸ்வரன் தருணிக்ஷா அவர்கள் மத்திய பிரிவில் சர்வதேச ரீதியில் மூன்றாம் இடத்தைப்பெற்று தனது பாடசாலைக்கும் மட்டக்களப்பு மண்ணுக்கும் நமது நாட்டுக்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.
இவருக்கான பரிசாக 200டொலர் புலமைப்பரிசும் சான்றிதழும் மேற்படி நிறுவனத்தினரால் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இவர் இவ்வாண்டு டொயோட்டா லங்கா நிறுவனத்தினரால் நடாத்தப்பட்ட கனவுக்கார் சித்திரப்போட்டியிலும் பரிசு பெற்ற ஒரேயோரு தமிழ் மாணவி என்பதும் ஜெயதீபன் சித்திர ஆசிரியரின் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

புனித சிசிலியா பெண்கள் பாடசாலைக்குழுமத்திற்கும் இவருக்கும் எமது வாழ்த்துக்கள்.