மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிகாரிகளுக்கான நடமாடும் சேவை

(லியோன்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிகாரிகளுக்கான நடமாடும் சேவை (
06) மட்டக்களப்பில்  இடம்பெற்றது .


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை புரிகின்ற வைத்திய அதிகாரிகள் , வைத்தியசாலை தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தேவைகள் தொடர்பாகவும்  அவற்றுக்கான  தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும்  நடாத்தப்பட நடமாடும் சேவை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் இப்ரா லெப்பை தலைமையில் (06.08.2016) சனிக்கிழமை    மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெறுகின்றது .

மட்டக்களப்பு வைத்தயசாலையில் இடம்பெறுகின்ற நடமாடும் சேவை நிகழ்வில்  சுகாதார அமைச்சின் பிரதம பணிப்பாளர் வைத்தியர்  பாலித மகிபால ,சுகாதார பிரதி அமைச்சர் பயிசால் காசிம் மற்றும் வைத்திய அதிகாரிகள் , அமைச்சின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்

மட்டக்களப்பு வைத்தயசாலைக்கு  விஜயத்தை மேற்கொண்ட  சுகாதார அமைச்சின் பிரதம பணிப்பாளர் மற்றும்  சுகாதார பிரதி அமைச்சர் ஆகியோர்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற மருத்துவ குறைபாடுகள் மற்றும் அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் வைத்தியசாலை நோயாளர்  விடுதிகளையும்  பார்வையிட்டனர் .