ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் ஆயத்தில் குரு மாற்றத்திற்கான விசேட ஓம் யாக பூசை

(லியோன்)

ஜெயந்திபுரம் அருள்மிகு  ஸ்ரீ  குமாரத்தன் ஆயத்தில் குரு மாற்றத்தை  முன்னிட்டு  ஓம யாக பூசை நடைபெற்றது


கிழக்கிலங்கையில் சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஜெயந்திபுரம் அருள்மிகு  ஸ்ரீ  குமாரத்தன் ஆலயத்தில்  குரு மாற்றத்தை  முன்னிட்டு பரிவார மூர்த்தி நவக்கிரக  பிரதிஸ்ட  ஓம யாக பூசை ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்களின் தலைமையில்   இன்று சிறப்பாக நடைபெற்றது.

விசேட ஓம  யாக  பூஜையினை தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு  நவக்கிரக  குருபகவானுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

குரு மாற்ற விசேட ஓம  யாக  பூசைகளில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.