மட்டக்களப்பில் இலங்கை கணக்காய்வாளர் நாயகம்

நல்லாட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் முறையான வகையில் நடாத்தப்படும் வகையில் முறையான கணக்காய்வுகளை மேற்கொள்வது தொடர்பிலான விசேட அறிவுறுத்தல் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இலங்கை கணக்காய்வாளர் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் இணைந்து இந்த செயலமர்வினை நடாத்தியது.

இந்த செயலமர்வில் இலங்கை கணக்காய்வாளர் நாயகம் எச்.எம்.காமினி விஜயசிங்க,கிழக்கு மாகாண பிரதம செயலாளர் எம்.எஸ்.அபயகுணர்வத்தன, கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளா திருமதி ஜே.முரளிதரன் உட்பட மூன்று மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் கணக்காளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நல்லாட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஊழல்அற்ற முறையில் வேலைத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் மேற்கொள்ளப்படவேண்டிய முறைகள் தொடர்பில் இங்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

கடந்த கால செயற்பாடுகளினால் நாடு எதிர்நோக்கிய பின்னடைவுகள் அவற்றில் இருந்து மீள் எழுச்சிபெறுவதற்கான அதிகாரிகளின் பங்குபற்றல்கள் குறித்த கருத்துரைகள் வழங்கப்பட்டன.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டும் வேலைத்திட்டங்களின்போது அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவற்றிற்கான வழிமுறைகள் தொடர்பிலும் இங்கு கருத்துகள் பரிமாறப்பட்டன.