கிழக்குமாகாண பறங்கியர் சங்கத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

 (லியோன்)


கிழக்குமாகாண பறங்கியர் சங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு   கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .


கிழக்கு மாகாண பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்பட்டு பறங்கியர் சங்க உறுப்பினர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரன்ஸ் செல்லர் தலைமையில் இன்று மட்டக்களப்பு கிழக்கு மாகான பறங்கியர் சங்க அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வின்  கிழக்கு மாகாணத்தில்  உள்ள பறங்கியர் சங்க உறுப்பினர்களும் அவர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளும் கலந்துகொண்டதுடன் ,அவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டது .