செட்டிபாளையத்தில் சிறுவர் சிநேகபூர்வ நிலையம்,விளையாட்டு பூங்கா திறந்துவைப்பு

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் பணிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக அரசாங்கம் அமுல்படுத்திவருகின்றது.

யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள சிறுவர்களின் மனநிலையினை மேம்படுத்தவேண்டும் என்னும் பரிந்துரையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட செட்டிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் சிநேகபூர்வ நிலையம் மற்றும் விளையாட்டு பூங்கா திறந்துவைக்கப்பட்டது.

சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தினை களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிவன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் ஏற்பாட்டில் இது தொடர்பான நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

சிவன் ஆலய தலைவர் மு.பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு இணைப்பாளர் வி.குகதாசன், சிவன் முன்பள்ளி அதிபர் க.துரைராஜா,களுவாஞ்சிகுடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரி.தயாளன்,முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அருந்ததி சீவரெத்தினம்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ம.புவிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.