மட்டக்களப்பு மாவட்டத்தின் பழமைமிகு தேவாலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு இருதயபுரம் புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நேற்று மாலை ஆலயத்தின் பங்குத்தந்தை தலைமையில் பிரதேசத்தின் ஏழு பகுதி மக்களின் தலைமையில் கொடியேற்றம் நிகழ்த்தப்பட்டது.
பங்குத்தந்தையினால் விசேட ஆசிர்வாதம் மற்றும் கொடியேற்ற பூஜைகள் நடாத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
தினமும் ஆலயத்தின் ஜெபமாலை நற்கருணை நடைபெறவுள்ளதுடன் திருவிழா திருப்பலி பூஜையும் நடைபெறும்.
எதிர்வரும் சனிக்கிழமை ஆயலத்தின் திருச்சொரூப பவனி நடைபெறவுள்ளதுடன் மறுதினம் மட்டக்களப்பு,அம்பாறை மாறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.