அனைத்துலக மாணவர்களின் முழக்கம் பேச்சுப் போட்டியில் கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் வித்தியாலய மாணவி மூன்றாம் இடம் .

(லியோன் )

இந்தியாவில் சென்னையில் வேலிம்பிலங்  குளோபல் கல்லூரியில் இடம்பெற்ற அனைத்துலக மாணவர்களின்   முழக்கம் பேச்சுப் போட்டியில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் வித்தியாலய மாணவி மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளார்.

மலேசியா நாட்டின் அஸ்ட்ரோ  நிறுவன ஏற்பாட்டில் வானவில்  வணக்கம் என்னும் நிகழ்ச்சியின் கீழ் இந்தியாவில் சென்னையில் வேலிம்பிலங் குளோபல் கல்லூரியில் இடம்பெற்ற அனைத்துலக மாணவர்களின் முழக்கம் பேச்சுப் போட்டியில்  உலக நாடுகளில் இருந்து கலந்து கொண்ட 18 மாணவர்களில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருந்து நான்கு பேர் கலந்துகொண்டுள்ளனர் .

இதில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் வித்தியாலய மாணவி அரியதாஸ் சதுர்ஷியா கலந்துகொண்டு முதல் சுற்றில் வெற்றிப்பெற்று  இரண்டாம் சுற்றில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளார்  . 

இவர் பெற்றுக்கொண்ட வெற்றியின் நிமித்தம் இவருக்கு மலேசிய நாட்டு நாணயத்தின் பெறுமதியான ஆயிரம் ரின் ரூபா பணப்பரிசும் ,வெற்றி கிண்ணமும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது .

 இவர் பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலம் இலங்கை நாட்டுக்கும் , கிழக்கு மாகாணத்திற்கும் . அவர் கல்வி கற்கின்ற பாடசாலைக்கும் கிடைத்த பெருமையினை சிறப்பிக்கும் முகமாக   மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் வித்தியாலய கல்லூரி தினமான இன்று இம் மாணவியை கௌரவித்து பரிசில்களும் வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில்  பிரதம அதிதிகளாக  மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் வித்தியாலய தாபகரான   க .கதிர்காமக் தம்பி உடையார் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவரும் இப் பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்றவர்களுமான  நொச்சிமுனை  ஆர் . முருகதாஸ் , கல்லடி உப்போடை எஸ் . விஜயகுமார்., கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன்  வணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் , மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் . பி .வன்னியசிங்கம் , மட்டக்களப்பு நொச்சிமுனை (தொழில் அதிபர் )   டி . ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்     ஆகியோர் கலந்துகொண்டனர்