கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயத்தின் 107வது கல்லூரி தின நிகழ்வு

(லியோன்)


மட்டக்களப்பு  கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயத்தின் 107வது கல்லூரி தின நிகழ்வு இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது .

மட்டக்களப்பு  கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயத்தின் 107வது கல்லூரி தினமும்  இப்  பாடசாலை தாபகர்களான திரு .க .கதிர்காமத்  தம்பி  உடையார் மற்றும் திரு .கு .சபாபதிப்  பிள்ளை உடையார் ஆகியோரின் நினைவு தினமும்  இன்று  வித்தியாலய  அதிபர் திருமதி .திலகவதி  .ஹரிதாஸ் தலைமையில் இடம்பெற்றது.


 ஆரம்ப நிகழ்வாக  அதிதிகளை  பாடசாலை மாணவியர்களினால் பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அதனை தொடர்ந்து அதிபர்  அவர்களினால்  பாடசாலை கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நாளை    (பிறந்த நாளை) கொண்டாடும் முகமாக   பிறந்த நாள் கீதம் இசைக்கப்பட்டடு பாற்சோறு பகிரப்பட்டது.

அதனை தொடர்ந்து மங்கள விகேற்றபட்டு இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் இடம்பெற்றது.  

இந் நிகழ்வுகளில்  பாடசாலை மாணவியர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து வாழும்போதே வாழ்த்தப்பட வேண்டும் எனும் தொனிப்பொருளில்  பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இறுதி நிகழ்வாக பாடசாலை மாணவ தலைவிகளின்  சத்தியபிரமாண  நிகழ்வுடன் கல்லூரி  தின மற்றும் பாடசாலை தாபகர்கள்   தினம் நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில்  இப் பாடசாலை தாபகரான   க .கதிர்காமக் தம்பி உடையார் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவரும் இப் பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்றவர்களுமான  நொச்சிமுனை  ஆர்.முருகதாஸ் , கல்லடி உப்போடை எஸ் . விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன்  வணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் , மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் . பி .வன்னியசிங்கம் , மட்டக்களப்பு நொச்சிமுனை (தொழில் அதிபர் )   டி . ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்     ஆகியோர் கலந்துகொண்டனர் .