பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வினாவிடை நூல்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன் )


மட்டக்களப்பு கல்வி வலயப் பாடசாலைகளில் தரம் 05 ,11  ,13 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வினாவிடை அடங்கிய நூல்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .


 மட்டக்களப்பு கல்வி வலய அலுவலக ஒழுங்கமைப்பில் ஏசியா  பவுண்டேசன் நிதி அனுசரணையில்  பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வினாவிடை அடங்கிய நூல்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு வின்செட் மகளிர் உயர்தர பாடசாலை மண்டபத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றது .

ஏசியா பவுண்டேசன் நிறுவனம் பாடசாலை மாணவர்களின் மத்தியில் வாசிப்பு திறனையும் , பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி திறனையும்  மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அலுவலகங்களுடன் இணைந்து இலவச நூல்களை வழங்கும் திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றது.

இதன்கீழ் தரம் ஐந்து புலமைப்பரிசில் , கல்வி பொது சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வினா விடை அடங்கிய நூல்களும் மற்றும் ஆங்கில அறிவினை மேம்படுத்துவதற்கான ஆங்கில நூல்களும்  இன்று மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள 64   பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது .



 இந்நிகழ்வில் ஏசியா பவுண்டேசன் பணிப்பாளர் அன்டன் நல்லதம்பி , மட்டக்களப்பு கல்வி வலய அதிகாரிகளான உதவி கல்விப் பணிப்பாளர்  த .யுவராஜா ( தமிழ் ) உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி . எஸ் . கங்கேஸ்வரன் (கல்வி அபிவிருத்தி ) பிரதி கல்விப் பணிப்பாளார் பி .கோவிந்தராஜா ( நிர்வாகம் )  மட்டக்களப்பு கல்வி அலுவலகம் முகாமைத்துவம் கைதர் அலி , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எ .சுகுமாரன் , ஏறாவூர் கோட்டக்கல்வி பணிப்பாளர் . எம் .பாலசுப்பிரமணியம்   மற்றும்  மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர் .