டெங்கு குடம்பிகள் இடங்களாக அடையாளம் காணப்பட்ட அரச அலுவலகங்களுக்கு அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டதுடன் ,எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

(லியோன்)



டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.


 டெங்கு  நோய் பெருக்கத்தில்  அதிகமாகவுள்ள மாவட்டங்களில்   நான்காவது  இடத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபை  பகுதிகளில்  தெரிவு செய்யப்பட அரச அலுவலகங்கள் மற்றும் அதனை அன்றிய சுற்றுசூழல் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையின் போது டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக  அடையாளம் காணப்பட்ட அரச அலுவலகங்களுக்கு  அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டதுடன் ,எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு  பிராந்திய  பொது சுகாதார மேற்பார்வை   பரிசோதகர் .  கே . ஜெயரஞ்சன்  தெரிவித்தார்


இன்று மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையில்  கோட்டமுனை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ,   பொலிஸ் உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர்.