கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலை துறையின் முன்னாள் பீடாதிபதியும் மட்டக்களப்பு அரங்க ஆற்றுகை நிலையத்தின் நிறுவுனருமான பேராசிரியர் எஸ்.மௌனகுருவின் நெறியாள்கையின் கீழ் இந்த நாடகம் உருவாக்கப்பட்டு மேடையேற்றப்பட்டுவருகின்றது.
இதன் கீழ் நேற்று கொழும்பு வெள்ளவத்தை இராம கிருஸ்ண மண்டபத்தில் பெருந்திரளான கலையார்வலர்கள் முன்னிலையில் மேடையேற்றப்பட்டபோது இந்த நாடகத்துக்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டதுடன் நிறைவுக்காட்சியை தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று கரகோசம் செய்து தமது வாழ்த்தினை தெரிவித்ததானது அந்த மேடை நாட்டிய நாடகத்தின் தன்மையை பறைசாற்றி நிற்கின்றது.
சிறப்புமிக்க மேடை அலங்காரம் வினைத்திறன் மிக்க கலைஞர்களின் படைப்பு அனைவரையும் ஈர்ப்புக்குள்ளாக்கியது. இராவணேசன் மட்டக்களப்பின் கலைப்பெருமையினை உலகெங்கும் கொண்டுசெல்வது வரவேற்கத்தக்கது.