மாற்றுத்திறனாளிகளை பலப்படுத்தும் செயற்திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான அரச உத்தியோகத்தர்கள் திணைக்களத் தலைவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்றைய தினம் பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அமெரிக்க உதவித்திட்டத்தின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கிழக்கு மற்றும் தெற்கு மாற்றுத்திறனாளிகளை பலப்படுத்துதல் திட்டத்தின் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏல்.ஓ.எச். நிறுவனத்தினைப் பங்காளியாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இன்றைய இக் கருத்தரங்கில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நவஜீவன நிறுவகப் பணிப்பாளர் குமாரினி விக்கிரமசூரிய, திட்ட முகாமையாளர்களான எஸ்..எம்.கே.பி.நந்தரெட்ண, ஏ.சௌந்தரராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இக் கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விதம், பிரதேசங்கள், சேர்த்துக் கொள்ளப்படவேண்டிய விடயங்கள், உள்ளிட்டவைகள் பற்றிக் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், குறைப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கடந்த காலத்தில் யுத்த சூழ்நிலையால் மாற்றுத்தினாளிகளாக்கப்பட்டவர்களுக்கு இதன்போது பல நன்மைகளை அடையமுடியும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.