இன்று வியாழக்கிழமை முற்பகல் முதல் அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் மேற்பார்வையில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானம் இவ்வாறு ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்ட பின்னர் மாலை குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.
இதன் போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் மற்றுமொரு வழங்கில் தனது தாயை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைவாசம் அனுபவித்து வரும், இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அனோசியஸ் சுரேஸ்கண்ணா எனப்படும் யூட் எனும் சந்தேக நபர் குறித்த பொது மைதானத்திற்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரபப்ட்டிருந்தார்.
மட்டக்களப்பினை பிறப்பிடமாக கொண்ட அவர், கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தாடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த பொது மைதானத்தில் புதைத்திருப்பதாக அரச சாட்சியாக மாறி குற்றப்பலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
இதற்கமைய குறித்த பொது மைதானத்தில் தேடுதல் மற்றும் தோண்டப்பட்ட பின்னர் எதுவும் கிடைக்காத காரணத்தினால் குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.
இதன்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.எம். றியாஸ் உட்பட் பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பொலிஸார் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.