வடக்கு தென்னை முக்கோணவலைய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனின் ஏற்பாட்டில், பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெற்றது.
மேலும், பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மற்றும் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது, மன்னார் மாவட்ட தெங்கு உற்பத்தியாளர்களுக்கான உரமானியம் மற்றும் உதவித் தொகை, பயனாளிகளுக்காக புதிய தென்னம் கன்று வழங்கப்பட்டன.
அதேவேளை, பனை அபிவிருத்தியை முன்னிறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இவ்விசேட நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.