மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டுத்துறையை மேம்படுத்த நடவடிக்கை –பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழங்களின் தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டு அவற்றின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கவையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் காலப்பகுதியில் விளையாட்டுக்துறையின் வளர்ச்சிக்காக வடக்கு கிழக்கில் பல்வேறு சிறப்பு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்கழங்களுக்கு உடற்பயிற்சி பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான உடற்பயிற்சி பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விளையாட்டுக்கழகங்களுக்கான பொருட்களை வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஜீவானந்தம்,மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் சத்தியவரதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.