மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் கல்வியை மாணவர்கள் பெற்றுக்கொள்ளுவதை ஊக்கப்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் மாணவர்கள் மத்தியில் தொழில் கல்வியின் அவசியம் தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
2014ஆம் ஆண்டுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வகையில் விழிப்பூட்டும் வீதி நாடகம் ஒன்று இன்று அரங்கேற்றப்பட்டது.
தொழில்பயிற்சி அதிகாரசபையின் மாவட்ட உதவி பணிப்பாளர் ரி.வினோதராஜா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றன.