மேய்ச்சல் தரை தொடர்பாக கடந்த மாதம் திருகோணமலையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படாத நிலையில் ஆவணங்களை பரிசீலனை செய்து பிறிதொரு நாளில் ஒன்று கூடி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டதாகவும் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு புறம்பாக சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை கண்டித்தே இப்போராட்டம் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இப்போராட்டத்தில் நேற்றையமுன்தினம் அம்பாரை விகாரை பிரிவினாவின் விகாராதிபதி ஏ.சந்தின்றியா ஹிமி , கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.புஸ்பராஜா, பண்ணையாளர் சங்கத்தலைவர் ஏ.முருகன்;, பண்ணையாளர் சங்க ஆலோசகரும் பிரதேசசபை உறுப்;பினருமான த.பூபாலபிள்ளை, உள்ளிட்ட பெருந்திரளான பண்ணையாளர்கள் பங்கேற்க இருந்தவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த மாகாணசபை உறுப்பினர் ரி. தவம் தலைமையிலான குழுவினருடனான பேச்சு வார்த்தை காரணமாக கைவிடப்பட்டது.
பேச்சுவார்த்தைகள் பலமணிநேரம் நடைபெற்றபோதும் முரண்பட்ட கருத்துக்கள் வெளியானதால் தீர்வின்றி வெளியேறிய தவம் தலைமையிலான குழுவினர் திருக்கோவில் பொலிசாரிடம் முறைப்பாடொன்றை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எது எவ்வாறாயினும் கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரையினை விட்டுக்கொடுக்க தாங்கள் தயாரில்லை எனவும் தக்கதீர்வு கிடைக்கும் வரையில் தங்களது உண்ணாவிரதப்போராட்டம் தொடரும் எனவும் மீறினால் கால்நடை அனைத்தையும் அரசு பொறுப்பேற்க நேரிடும் எனவும் நேற்றைய தினம் உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொண்ட பண்ணையாளர்கள் குறிப்பிட்டனர்.

.jpg)
.jpg)
.jpg)
