மட்டக்களப்பு –திருமலை வீதியில் உள்ள ஆடை விற்பனை நிலையவே இவ்வாறு உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கூரையினை பிரித்;;துகொண்டு இறங்கியுள்ள கொள்ளையர்கள் இந்த கொள்ளைச்சம்பவத்தினை நடத்தியுள்ளனர்.
இதன்போது சுமார் 50ஆயிரம் ரூபா பெறுமதியான ஆடைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
குடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டுள்ள கொள்ளையிடப்பட்டிருந்தது.இதில் ஒரு வர்த்தக நிலையமே மீண்டும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
