( எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கிழக்கு மாகாணசபையின் கௌரவ உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமலவீர திசாநாயக இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தி்ற்கு வருகை தந்திருந்தார்.
இவ்வருடம் நூற்றாண்டு விழாக்காண இருக்கும் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தி்ன் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமாக ஆராயும் கலந்துரையாடல் பாடசாலையின் அதிபர் ஏ.பி.முஜீன் தலைமையில் இடம்பெற்ற போது கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் , சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் , ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் , ஓய்வு பெற்ற முன்னாள் கோட்ட கல்விப் பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மட் , கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் பிரத்தியேக செயலாளர் ஸீ.எம்.முனாஸ் , பாடசாலைபிரதி அதிபர் எம்.சீ.எம்.றிப்கா உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)