மூன்று நாள் சாரணர் பயிற்சிப்பாசறை


( எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த மூன்று நாள் சாரணர் பயிற்சிப் பாசறை மாளிகைக்காடு அல் {ஹசைன் வித்தியாலயத்தில் கடந்த 6, 7, 8 ஆகிய தினங்களில்  இடம்பெற்றது.


மாவட்ட சாரணர்  ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பாசறைக்கு கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் பிரதம அதிதியாகவும் மாளிகைக்காடு அல் {ஹசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர்  கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி , பெரியநீலாவணை விஷ்னு மகா வித்தியாலயம் , கல்முனை இராம கிருஸ்ணன் மகா வித்தியாலயம் , நிந்தவுர் அல் அஸறக் தேசிய பாடசாலை , மாளிகைக்காடு அல் {ஹசைன் வித்தியாலயம் , சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம் ஆகியவற்றைச் சேரந்து சாரணர் மாணவர்கள் இந்த சாரணர் பாசறையில் கலந்து கொண்டனர் .

சாரணர் பாசறைக்கு பொறுப்பான  ஓய்வுபெற்ற அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி உடற்கல்வித்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா மற்றும் உதவி சாரண பயிற்சி ஆணையாளர் கே.எம்..தமீம் மற்றும் எம்.ஏ.சலாம் ஆகியோர் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்கள் .

இனங்களிடையே நல்லுறவையும் பரஸ்பர ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பல நிகழ்வுகள் இப்பாசறையின் போது ஒழுங்கு செய்ப்பட்டிருந்தது.