குருணாகல் கொறக்கொல்ல மெல்சிறிபுர பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஏறாவூரிலிருந்து புனித மக்கா நகருக்கு உம்றாவுக்காக பயணமான சிலரை பண்டார நாயக்க விமான நிலையம் சென்று வழியனுப்பிவிட்டு நேற்று ஏறாவூர் திரும்பிக் கொண்டிருந்த போது இவர்கள் பயணித்த வான் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவர்கள் பயணித்த வேன் லொறியொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வேன்சாரதி இதில் படுகாயமடைந்துள்ளதாகவும் ஏறாவூர் முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார்.
