பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் 4ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வும் மாதாந்த நிர்வாகக்குழு கூட்டமும் 10ஆம்திகதி திங்கடகிழமை மட்டக்களப்பு கல்லடி அரசாங்க சுற்றுலாவிடுதியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் பாம் பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் பிரதான பிரதி அமைப்பாளரும் தலைவருமான.சுனில்தம்பேபொல தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அமைப்பின் செயலாளர் சிவகுணம் ,பொருளாளர் நிர்வாககுழு உறுப்பினர்கள் ஊடகவியளாளர்கள் அடங்க 33 பேர் கலந்துகொண்டனர்.
இதில் சிறப்பாகஅம்பாறை மாவட்டத்திற்கு உரிய முகாமையாளர்களும் நிர்வாக குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வின் பிரதான சிறப்புவிருந்தினராக மட்டக்களப்புமாவட்டத்தின் திட்டமிடல் பணிப்பாளரான ஆர்.நெடும்செழியன் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வு காலை 09.00 மணியளவில் இறை வணக்கத்துடனும் அமைப்பின் கீதத்துடனும் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து நிறுவாக குழு உறுப்பினர்களின் அறிமுகமும் இடம் பெற்றது.
இதன்போது பாம் பவுண்டேசன் அமைப்பின் கடந்த கால செயற்றிட்டங்கள் மற்றும் நடைமுறையில் உள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இறுதியாக இணையத்தள அங்குரார்ப்ண நிகழ்வும் இடம்பெற்றது.





