சமுர்த்தி அதிகாரிகளின் வாகனம் விபத்து நான்கு பேர் பலி-19பேர் படுகாயம் -அரசியல்வாதிகள் ஸ்தலத்துக்கு விரைவு (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு-பொலநறுவை வீதியின் மன்னம்பிட்டியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் மூன்று சமுர்த்தி அதிகாரிகள் உட்பட நான்கு பேர் உயிரிந்துள்ளதுடன் 19பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.00மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சுமார் சென்ற சுமார் 23பேர் கொண்ட மினி பஸ்சே விபத்தில் சிக்கியுள்ளது.

வேகமாகச்சென்ற வான் மரமொன்றில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதுடன் இதன்போது ஸ்தலத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளதுடன் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவத்தில் வான் சாரதியான கல்லாறை சேர்ந்த உதயகுமார், கிராண் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக கடமையாற்றும் பேரின்பம் சபேசன்,வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கருத்திட்ட உதவியாளர் வேலுப்பிள்ளை ஜீவரெட்னம்,வாகரையில் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றிவரும் திருமதி மேனகா பாஸ்கரன் என்பவரும் உயிரிந்துள்ளார்.

இவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேநேரம் பொலநறுவை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கிராண் பிரதே சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வாமதேவன் என்பவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை உயிரிழந்தவர்களின் சடலங்களை மட்டக்களப்புக்குகொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அதிகமானோர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.அவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளுக்கான நடவடிக்கைகளை வைத்தியசாலை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்;ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் பொலநறுவை வைத்தியசாலைக்கு சென்று காயமடைந்து சிகிச்சைபெற்றுவருவோரை பார்வையிட்டனர்.