மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து ஆண்டு அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஆராய்வு

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஐந்து ஆண்டு அபிவிருத்தித்திட்டம் குறித்த விளக்கமளிக்கும் கூட்டம் இன்று பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண திட்டமிடல் செயலக பிரதிப் பிரதம செயலாளர் எஸ்.மகேந்திரராஜா கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் ஐந்து ஆண்டுத்திட்டத்துக்கான திணைக்களங்களின் திட்ட முன்மொழிவுகளின் திருத்தங்களுடன் துறைரீதியாக ஆராயப்பட்டன.

இதன் போது, உள்ளுராட்சித்திணைக்களம்,  விவசாயத் திணைக்கள, கமநல சேவைகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், விதைகள் அத்தாட்சிப்படுத்தல் பிரிவு, கடல் தொழில் நீரியல் வளங்கள் திணைக்களம், உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து திணைக்களங்களினதும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில், கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி அபிவிருத்தி, வீதி, வீடமைப்பு, நீர்வழங்கலும் வடிகாலமைப்பும், சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், கைத்தொழில் துறை, சூழலும் அனர்த்த முகாமைத்துவமும், உள்ளுராட்சித்துறை, கூட்டுறவுச் சங்கங்களின் அபவிருத்திகள், தொழில்துறை மேம்படுத்தல்கள் எனப் பல பிரிவுகளில் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆhயப்பட்டன.

மாவட்ட அபிவிருத்தித் திட்டமானது 2013 முதல் 2017வரையில் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத் தயாரிப்பில் உதவி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த தொண்டலர் சேவை நிறுவனத்தின் திட்டமிடல் ஆலோசகரான ஹேய்சல் டுர்பிச் ஐந்தாண்டு திட்டம் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.