மன்னம்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தவர்களை பொலநறுவை போதனா வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மட்டுநியூஸ{க்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்.
மன்னம்பிட்டியில் இடம்பெற்ற விபத்துச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது.
உயிரிழந்தவர்களின் சடலங்களை கொண்டுவருவதற்கு நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் விரைவாகமேற்கொண்டோம்.
அதேபோன்று சிகிச்சைபெற்றுவருவோரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு பொலநறுவை போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் கோரியபோது அதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி அதிகாரிகளின் இழப்பு எமது சமூகத்துக்கு பாரிய இழப்பாகும்.இந்தவேளையில் நாங்கள் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.என்றார்.
.jpg)