பொதுமக்களின் வளர்ச்சிக்கு வங்கிகள் பங்காற்றவேண்டும் -மேலதிக அரசாங்க அதிபர்

வங்கிகள் பொதுமக்களுடன் ஒன்றித்துசெயற்படவேண்டும் என தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பாஸ்கரன்,பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு வங்கிகள் சிறந்த பங்களிப்பினை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் அனைத்து வங்கிக்கிளைகளிலும் ஒரே தடவையில் இன்று இதுறும் வாசனா கணக்கு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பிரதேச வங்கி ஆரம்பிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இலங்கையில் 264 கிளைகளைக்கொண்டு இயங்கிவருகின்றது.

அரச வங்கியாக செயற்பட்டுவரும் இந்த வங்கி மூலம் வறுமை நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.

இதன் கீழ் பொதுமக்கள் மத்தியில் சேமிப்பு பழகத்தினை ஏற்படுத்தி அவர்கள் மத்தியில் சிறந்த பொருளாதார நிலையினை ஏற்படுத்தும் வகையில் இதுறும் வாசனா கணக்கு நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்;டத்தின் பிரதான நிகழ்வு பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு கிளையில் நடத்தப்பட்டது.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிராந்திய முகாமையாளர் சந்தானம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்;ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன் மட்டக்களப்பு பிராந்திய வங்கி முகாமையாளர் சத்தியநாதனின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றதுடன் இதில் வர்த்தக பிரமுகர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.