வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய தெப்பத்திருவிழா

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்துக்குட்பட்ட பழம்பெரும் கிராமமான வீரமுனையில் அருள்பாலித்துவரும் ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 6ஆம் நாளாகிய நேற்று விசேடமாக இம்முறை தெப்பத்திருவிழா இடம்பெற்றது.

சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உள் வீதி, வெளி வீதி திரு உலா வருதலை தொடர்ந்து தீர்த்தகேணியில் சோடனை செய்யப்பட்ட படகில் அமைக்கப்பட்ட சப்பரத்தில் விநாயகர் அமர்த்தப்பட்டு தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மேலும் நாளை வெள்ளிக்கிழமை வேட்டைத்திருவிழா இடம்பெறவுள்ளது.